Sun. Jun 16- 2019

மீடியாமேனியா ( ஊடக பித்து )என்ற நோய் பற்றிக் கொண்டதால்…அதிமுக செய்தி தொடர்பாளர்களுக்கு…நிர்வாகிகளுக்கு..வாய்ப்பூட்டு..!!!

Share This News:

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்பாட்டில் இருந்தவரை (2016-செப்டம்பர் 22-க்கு முன்பு வரை) பத்திரிகையாளர்களைக் கண்டால் பயந்து ஓடியவர்கள் தான் அதிமுகவின் நிர்வாகிகளும்,அமைச்சர்களும் என்பது ஊரறிந்த ரகசியம்

ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அந்த கால கட்டத்தில் அப்பல்லோ மருத்துவமனை வாசலில் இவர்கள் இட்லியோடு..செய்தியாளர்களை சந்திக்க தொடங்கினார்கள்

அது ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் ( 2016-டிசம்பர் -5) அது..விசுவரூபம் எடுத்து.சட்னியில் தொடங்கி சாவு வரை…கதையளந்தார்கள்

ஒவ்வோரு அமைச்சரும்.ஒரு தனியாக அரசு செலவிலேயே பி.ஆர்.ஓ வைக்க தொடங்கினார்,கட்சி நிர்வாகிகளின் உதவியாளர்கள் திடீர் பி.ஆர்.ஓ-க்களாக மாறினர்

அமைச்சர்களை…கட்சி நிர்வாகிகளை மீடியாமேனியா ( ஊடக பித்து ) என்ற நோய் பற்றிக்கொண்டது.
..

பத்திரிகையாளர்களை கண்டாலே பயந்து ஓடியவர்கள்,,,பாய்ந்து ஓடி வந்தார்கள்..ஒவ்வோரு அமைச்சரின்..நிர்வாகிகளின் வீட்டு வாசலில் ஊடகங்கள் கால்கடுக்க காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது

அமெரிக்க அதிபர் டிரம்புக்குக் பதில் சொன்னார்கள்…கத்திரிக்காய் விலைக்கும் பதில் சொன்னார்கள்

அரிஸ்டாட்டில்..பெர்னாட்ஷாவுக்கு தெரியாத பதில்கள் கூட இவர்களுக்கு தெரிந்திருந்தது (!) ஆச்சரியம்..

பிடல்காஸ்ட்ரோவையும்..சேகுவாராவையும் தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்..சில அமைச்சர்கள் விஞ்ஞானி ஆனார்கள்…சில நிர்வாகிகள்..தத்துவஞானி ஆனார்கள்

பாடினார்கள்..பாடம் எடுத்தார்கள்..படம் வரைந்தார்கள்….(!)

எப்போது வேண்டுமானாலும் டிவிக்காரர்கள் முன் நிற்க வேண்டும் என்பதால்..அடிக்கடி ‘டை”அடித்துக் கொண்டார்கள்..உதவியாளர்கள் கையில் ரோஸ்பவுடருடன் கூடிய மேக்கப் செட் தயார் நிலையில் இருந்தது

சில அமைச்சர்கள் வலைபக்கங்கள்,முகநூல் பக்கங்கள்,டுவிட்டர் என தொடங்கி..சில அமைச்சர்கள் யூடியூப் சேனல் தொடங்கும் அளவிற்கு போனது

விளைவு மூலைக்கு.மூலை.அமைச்சர்கள் பேட்டி..நிர்வாகிகள் பேட்டி… கட்சியின் கொள்கையும் கோட்பாடு..கட்டுப்பாடும் காற்றில் பறந்தன

அனைத்து சேனல்களிலும் எவராவது ஒருவர் கட்சி கொள்கை என்னவென்று அறியாது அதிமுக கட்சி பற்றி… ஆட்சி பற்றி… பேசிக்கொண்டிருப்பார்கள்..இவர்களில் பலர் அதிமுக புதிதாக வந்தவர்கள் என்பது குரிப்பிடத்தக்கது..

(சிலர் விதிவிலக்கு)

இந்நிலையில்…

அடுத்த அறிவிப்பு வரும் வரை கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் யாரும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வேண்டாம் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் ஒற்றைத் தலைமை கோரிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், அதுபற்றி பேசப்படவில்லை.

தற்போது உள்ளபடி செயல்பட ராஜன் செல்லப்பா ஒப்புக்கொண்டதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். ஒற்றை தலைமை குறித்த கோரிக்கை இனி அதிமுகவில் எழாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இந்நிலையில், அதிமுக தலைமை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

அதிமுக சார்பில் பத்திரிகைகள், ஊடகங்கள் வழியாகவும் இன்னபிற சமூக தொடர்பு சாதனங்கள் வழியாகவும் கருத்துக்கள் தெரிவிக்கும் பணிக்கென செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அவர்கள் கருத்துக்களை தெரிவிக்க உரிமை பெற்றவர்கள்.

பாராளுமன்றத் தேர்தல் முடிந்து அடுத்தகட்ட அரசியல் பணிகள் தொடங்கி இருக்கும் இந்த வேளையில், கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள், தலைமைக் கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு ஊடகத்திலும், பத்திரிகையிலும், சமூக தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மற்றவர்கள் யாரும் பத்திரிகைகளிலோ, ஊடகங்களிலோ, இன்னபிற சமூக தொடர்பு சாதனங்களிலோ தங்கள் கருத்துக்களை கழகத்தின் கருத்துக்களாகத் தெரிவிப்பது கூடாது. அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

@கண்டதும்,பார்த்ததும்,பழகியதும்,எழுதியதும் #ரிப்போர்ட்டர்_ராஜன்

#newsbank.in

#aiadmk #mediamania #press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *