Sun. Jun 16- 2019

அதிமுக செய்தி: தலைமை பற்றி தலைமைக்கழகத்தில் பேசவில்லை!..நடந்தது என்ன..நடக்க போவது என்ன?

Share This News:

அதிமுவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று மதுரை ராஜன் செல்லப்பா கட்சிக்குள் குண்டு போட்டவுடன், அது இன்று பலமாக வெடிக்கும் என்று பலரும் நினைத்திருந்த வேளையில் அது புஷ்வாணமாக போய் விட்டது

அதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், செய்தித் தொடர்பாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணிக்குத் துவங்கியது. கூட்டத்தில் பங்கேற்க செல்லும் முன்பாக அனைவரின் செல்போன்களும் வாங்கி வைத்துக் கொண்டார்கள்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மட்டுமே பேசினார்கள்

பாராளுமன்ற தேர்தல் தோல்வி, உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், பொதுக் குழு கூட்டம் தொடர்பாக மட்டும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது

ஏதாவது பிரச்சினை இருந்தால் எங்களிட்டம் நேரடியாகக் கூறுங்கள், ஊடகங்களில் பேச வேண்டாம் என்றும் அப்போது வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

(இதைத்தான் நான் பல நாளாக கூறி வருகிறேன்)

கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்க 11 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் தேர்தல் நிலைப்பாடு, வேட்பாளர் தேர்வு, முக்கிய பிரச்சினைகள் குறித்து இக்குழு முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தித்தார் 12 மணியளவில் கூட்டம் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகிய நால்வரும் தனி அறையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர்

கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த ராஜேந்திர பாலாஜியிடம், ராஜன் செல்லப்பா கோபமாக செல்கிறாரே…. என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,…

“கூட்டத்திற்கு சிரித்துக்கொண்டே சென்றோம். சிரித்துக்கொண்டே வெளியே வருகிறோம். கூட்டத்தில் எதுவும் பிரச்சினையில்லை. திருப்திகரமாக பேசினோம்.என பதிலளித்ததோடு

கடந்த தேர்தல் வெற்றி, தோல்விகளைப் பற்றி ஆலோசனை நடத்தினோம். ஒற்றைத் தலைமை குறித்த கருத்தே கூட்டத்தில் எழவில்லை” என்று பதிலளித்தார்.

(ஊடகதோடு பேசக்கூடாது..என்று அரங்கில் எடுத்த முடிவை வாசலிலே மீறி விட்டார் இவர்)

அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “தேர்தல் தொடர்பாகவும் கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவும் விவாதித்தோம். அனைவரும் மகிழ்ச்சியாகவே உள்ளோம். அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வருவதற்கு வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.

(ஊடகத்தோடு பேசாமல் போனால் இவருக்கு உறக்கம் வராது)

சம்பிரதாயமாக சில உப்புக்கும் பெறாத சில தீர்மானங்கள் நிறைவேற்றிய தோடு கூட்டம் கலைந்தது

(குறிப்பு: தற்போது எந்த பிரச்சினையும் வேண்டாம்,…என்று தந்திர பூமியான நாட்டின் தலைநகரில் இருந்த கட்சி தூதுவர்களிடம் ’பெரிய சேட்’ கூறியதால்..கூட்டம் கூடி கலைந்தது அவ்வளவே..அடுத்த மேலிருக்கிறவர்கள் எடுக்கும் முடிவை பொறுத்தே அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வு இருக்கும்)

#ரிப்போர்ட்டர்_ராஜன்

#newsbank.in

#aiadmk #meetting #today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *