Sun. Jun 16- 2019

மாயமான விமானம் சிதைந்த நிலையில் அருணாசல பிரதேசத்தில் கிடக்கிறது

Share This News:

காணாமல் போன விமானப்படை விமானம் அருணாசல பிரதேசத்தில் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போன ஏ.என்-32 ரக விமானத்தின் பாகங்கள் அருணாச்சல பிரதேசம் சியான் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3-ந்தேதி, 13 பேருடன் அசாமில் இருந்து அருணாசல பிரதேசத்துக்கு புறப்பட்டது.

அது கிளம்பிய அரைமணி நேரத்தில் அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன.

13 பேருடன் சென்ற இந்திய விமானப்படையின் ஏ.என்.32 ரக விமானம் ஜூன் 3-ம் தேதி மதியம் 12.25 மணி அளவில் காணாமல் போனது. காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க விமானப்படை விமானங்கள், ராணுவம், மலைவாழ் மக்கள் உதவியுடன் ஒரு வாரமாக தேடும்பணி நடைபெற்றது.

காணாமல் போன விமானத்தை கண்டறிவதில் மோசமான வானிலை காரணமாக சிக்கல் ஏற்பட்டது.

எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டரின் உதவியுடன் விமானப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏ.என்.32 ரக விமானம் சிதைந்த நிலையில் இருப்பதை கண்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் கண்டுபிடிக்கப்பட்டதை இந்திய விமானப்படையும் உறுதி செய்துள்ளது. அதில் பயணம் செய்த 13 பேரின் நிலைமை என்ன ஆனது என்பது குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#newsbank.in

#airforceflight #missing #arunasalprathesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *