Sun. Jun 16- 2019

மேற்கு வங்கத்தில், பா.ஜ.வெற்றி பெறும் போது, தமிழகத்தில் ஏன் நம்மால் வெற்றி பெற முடியவில்லை-அமீத்ஷா

Share This News:

தமிழகத்திலிருந்து யாருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. தமிழகத்தைப் பொருத்தவரை, தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளன.

அ.தி.மு.க., அரசிற்கு, மத்திய அரசு சார்பாக, அதிக அளவில் உதவி செய்தும், பா.ஜ.,விற்கு, வெற்றி பெறக்கூடிய தொகுதி களை, அ.தி.மு.க., தரவில்லை.

தமிழகத்தில், மோடியின் பிரசாரத்திற்கு வந்த கூட்டம் கூட, அ.தி.மு.க., தலைவர்களின் கூட்டத்திற்கு வரவில்லை.

பா.ஜ.விற்கு வந்த இந்த கூட்டத்தை ஓட்டாக மாற்ற, அ.தி.மு.க.,வால் முடியவில்லை. இதற்கு, அ.தி.மு.க.,வின் உட்பூசலே காரணம் என்கிறது, பா.ஜ., மேலிடம்.

மேலும், அ.தி.மு.க., தலைவர்கள், சட்டசபை இடைத்தேர்தலில்தான் அதிக கவனம் செலுத்தினர்; பார்லிமென்ட் தேர்தலை கண்டு கொள்ளவில்லை என்றும், பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேற்கு வங்கத்தில், பா.ஜ., வெற்றி பெறும் போது, தமிழகத்தில் ஏன் நம்மால் வெற்றி பெறமுடியாது என்கிறார் அமித் ஷா

#newsbank

#amithsha #tamilnadu #westbengal #bjp #aiadmk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *