Sun. Jun 16- 2019
Share This News:

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று சந்தித்து பேசினார்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது தமிழகத்தில்,உங்களின் பணிகள் தொடர வேண்டும்; அதிமுக., அரசு மீது, எதிர்க்கட்சிகள் கூறிய, ஊழல் குற்றச்சாட்டு விபரங்களை, எனக்கு அனுப்பி வையுங்கள்’ என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திடம்,மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா கேட்டுக் கொண்டதாக டெல்லி செய்தியாளர்கள் கூறுகின்றனர்

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் பழனிசாமி ராஜ்பவனில் இன்று மாலை சந்தித்துப் பேசினார்.

அப்போது, டி.ஜி.பி. நியமனம், தலைமைச் செயலாளர் நியமனம், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.

#newsbank.in

#banwari_lal_prohit #edappadikpalanisamy #tngoverner_tncm_meet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *