Sun. Jun 16- 2019

மும்பை: தானே ரயில் நிலையத்தில் ஒரு ரூபாய் கிளினிக்கில் பூஜா என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

Share This News:

மும்பையை சேர்ந்த பூஜா சவுகான் என்ற 20 வயது கர்ப்பிணி ஏப்ரல்,27,2019 காலை கொங்கன் கான்யா விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார்.

அந்த நேரத்தில் அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து உடனடியாக ரயிலானது தானே ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

அங்கிருந்து ஸ்ட்ரெச்சர் மூலம், அருகில் செயல்பட்டு வந்த ரயில்வேயின் 1 ரூபாய் கிளினிக்கிற்கு பூஜா கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் உதவியால் பூஜாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

மும்பை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் 1 ரூபாய் கிளினிக் செயல்பட்டு வருகிறது.

வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த கிளினிக், பயணிகளுக்கு அவரச காலத்தில் உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதியும் கூட தானே ரயில் நிலையத்தில் உள்ள 1 ரூபாய் கிளினிக்கில் பெண் ஒருவருக்கு அழகான குழந்தை பிறந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு பெண்ணுக்கு அதே ரயில் நிலையத்தில் மருத்துவர்களின் உதவியால் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணிகள் மட்டுமல்லாமல் பலருக்கும் 1 ரூபாய் கிளினிக் உதவி வருவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய ரயில்வேயுடன், ஒரு தனியார் மருத்துவ நிறுவனமும் இணைந்து நடத்தும் இந்த கிளினிக்கில் மருத்துவ சேவைக்கான அனைத்து வசதிகளும் இருக்கின்றன. அதுவும் மிக மிகக் குறைந்த கட்டணத்தில்!

இதனை நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் விரைவில் நடைமுறைபடுத்தப்படும் என மத்திய அரசு ஏற்கனவே கூறி இருந்தது.
சீக்கிரம்.. சீக்கிரமே செய்யுங்க சார்

#newsbank.in

#numbai_thane #railway_one_rupee #hospital

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *