Sun. Jun 16- 2019

அதிமுகவின் அடுத்த தலைமை…ரஜினிகாந்தா!!…மீண்டும் செய்திகளில் போயஸ்கார்டன்..!!!

Share This News:

தலைவர் தலைமையில் ஒற்றை தலைமையில்தான், அதிமுக இயங்க வேண்டும் என்று, மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சமீபத்தில் தெரிவித்தார்.

அவர் கூறியதில் ஒரு வார்த்தை மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியது. என்னவென்றால்.. எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் ஏற்கனவே ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தான்.

அவர்களில் ஒருவர் தலைவராக இருக்கலாம். அல்லது இவர்கள் அல்லாமல் வேறு ஒருவரும் தலைவராக இருக்கலாம் என்ற கோரிக்கையை முன் வைத்தார் ராஜன் செல்லப்பா.

ராஜன் செல்லப்பாவின் இந்த வார்த்தை மிக முக்கியமானது.

ஏனெனில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், குறிப்பிட்டுச் சொல்லும் படியாக மக்களை ஈர்க்கக் கூடிய தலைவர்கள் அதிமுகவில் இல்லை என்றே கூறலாம்.

அப்படியானால் மக்களை ஈர்க்கக் கூடிய அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கான விடை, போயஸ் கார்டன் நோக்கிதான் செல்கிறது. பாஜக ஆசீர்வாதத்துடன்

ஆம், அங்குதான் ரஜினிகாந்த் வசிக்கிறார்.

#ReporterRajan

#newsbank.in

#rajinikanth #aiadmk #poesgarden #rajanchellappa #bjp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *