Sun. Jun 16- 2019

எந்த அடிப்படையில் பத்திரிகையாளரை கைது செய்தீர்கள்?-அவர் என்ன கொலையா செய்தார்…உச்ச நீதிமன்றம்-உ.பி அரசிடம் கேள்வி

Share This News:

உத்தரபிரதேசத்தில் பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை 11 நாள் நீதிமன்றக் காவலில் வைத்ததற்கு சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததாக டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் பிரசாந்த் கனோஜியாவை உ.பி. போலீஸ் கைது செய்தது.

இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு எதிராக பத்திரிகையாளரின் மனைவி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, உ.பி. அரசு மீது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியது.

(கைதின் பின்னணி:- உபி., முதல்வர் அலுவலகம் அருகே ஒரு பெண், முதல்வர் யோகியை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக பேட்டி அளித்தார். இது தொடர்பாக முதல்வருக்கும் தெரிவித்திருப்பதாக கூறினார். இந்த வீடியோவை தான் நிருபர், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டார். சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பியதாக பத்திரிகையாளர் பிரசாந்த் கன்னோஜியா என்பவர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவரது மனைவி ஜகீசா அரோரா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை கோர்ட் அவசரமாக விசாரிக்க ஏற்று கொண்டது.)

கைது நடவடிக்கையை சரியானதாக கருதுகிறீர்களா?

அவர் என்ன கொலைக்குற்றம் செய்துவிட்டாரா?

அவதூறு வழக்கிற்காக நீதிமன்ற காவலில் வைக்க வேண்டிய அவசியம் என்ன?

லக்னோ மாஜிஸ்திரேட் தவறான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஒவ்வொரு தனிநபருக்கும் தன்னுடைய கருத்தை சுதந்திரமாக தெரிவிக்கும் உரிமையுள்ளது.

சில நேரங்களில் சில விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டியவைதான்.

அதற்காக கைது செய்வீர்களா?

எதற்கெடுத்தாலும் கைது நடவடிக்கை எடுப்பீர்களா?

என சரமாரியான கேள்விகளை எழுப்பியது.

ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவில் வழக்குப்பதிவு என்பது எப்படி சரியாகும்?

எனவும் கடுமையான கண்டனத்தை சுப்ரீம் கோர்ட்டு வெளிப்படுத்தியது.

பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவிற்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஜாமீன் வழங்கியதால் பிரசாந்த் கனோஜியாவின் சமூக வலைதள கருத்தை ஏற்றுக்கொள்கிறோம் என பொருள் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளது

உ.பி.யில் பத்திரிகையாளரை கைது செய்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் செயல் முட்டாள் தனமானது-ராகுல் காந்தி

உ.பி.யில் பத்திரிகையாளரை கைது செய்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் செயல் முட்டாள்தனமானது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், உத்தரப்பிரதேசத்தில் தன்னை விமர்சித்த பத்திரிகையாளர் கனோஜியை கைது செய்து சிறையில் அடைத்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் செயல் முட்டாள்தனமானது. கைது செய்த பத்திரிகையாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

#newsbank.in

#supremevourt #upgovt #journalistarrest

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *