Sun. Jun 16- 2019

12-06-2019- புதன்கிழமை இன்றைய ராசி பலன்கள்

Share This News:

மேஷம்

வேலைத் தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : சாதகமான நாள்.

பரணி : ஆதரவு கிடைக்கும்.

கிருத்திகை : எண்ணங்கள் மேம்படும்.

ரிஷபம்

பிள்ளைகளின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். புதிய நபர்களின் மூலம் அனுகூலமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : தேவைகள் நிறைவேறும்.

ரோகிணி : இன்னல்கள் நீங்கும்.

மிருகசீரிடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

மிதுனம்

தடைபட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஆகாய மார்க்க பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சந்தேக உணர்வினால் மனக்கசப்புகள் ஏற்படலாம். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : எண்ணங்கள் ஈடேறும்.

திருவாதிரை : அனுகூலம் உண்டாகும்.

புனர்பூசம் : உயர்வான நாள்.

கடகம்

வியாபாரத்தில் புதிய யுக்திகளை கடைபிடிப்பதன் மூலம் இலாபம் அதிகரிக்கும். குடும்ப நபர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். பொதுபணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : இலாபம் அதிகரிக்கும்.

பூசம் : கீர்த்தி உண்டாகும்.

ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சிம்மம்

கணவன், மனைவி இடையே அனுசரித்து செல்லவும். இணையதளம் தொடர்பான பணிகளில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மகம் : அனுசரித்து செல்லவும்.

பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திரம் : அமைதி வேண்டும்.

கன்னி

தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். தைரியத்துடன் எண்ணிய செயலை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள். பிறரின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் பணியில் கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திரம் : அங்கீகாரம் கிடைக்கும்.

அஸ்தம் : தைரியத்துடன் செயல்படுவீர்கள்.

சித்திரை : எதிர்ப்புகளை களைவீர்கள்.

துலாம்

தொழில் சம்பந்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்க பணியில் எதிர்பார்த்த ஆதரவான சூழல் அமையும். வேலையாட்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். பயணங்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : ஆதரவான நாள்.

சுவாதி : அனுகூலம் உண்டாகும்.

விசாகம் : முன்னேற்றமான நாள்.

விருச்சிகம்

தந்தைவழி உறவினர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். செய்யும் செயல்களில் கவனத்துடன் இருக்கவும். பிறருக்கு உதவுதலில் சிந்தித்து செயல்படவும். மனதில் தோன்றும் ஒருவிதமான எண்ணங்களால் சோர்வு உண்டாகும். உடன் பணிபுரிபவர்களால் மரியாதை உயரும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

விசாகம் : கனிவு வேண்டும்.

அனுஷம் : செயலில் கவனம் வேண்டும்.

கேட்டை :சிந்தித்து செயல்படவும்.

தனுசு

உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். கூட்டாளிகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : இன்பமான நாள்.

பூராடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

உத்திராடம் : மேன்மை உண்டாகும்.

மகரம்

உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சாதகமான சூழல் அமையும். புதுவிதமான புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எண்ணங்கள் தெளிவாகும். புதிய நட்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.

திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.

அவிட்டம் : நட்பு வட்டம் பெருகும்.

கும்பம்

வியாபாரம் தொடர்பான பணிகளில் இழுபறியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் நிதானம் வேண்டும். செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : காலதாமதம் உண்டாகும்.

சதயம் : நிதானம் வேண்டும்.

பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

மீனம்

பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.

உத்திரட்டாதி : ஆதாயமான நாள்.

ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

#newsbank.in

#today #todayrasipalan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *